புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2020

முதல் இன்னிங்ஸில் ஆஸி 195 ஓட்டங்களுக்கு சுருண்டது!

www.pungudutivuswiss.com.
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் சுப்மான் கில் 28 ஓட்டங்களுடனும் செடீஸ்வர் புஜாரா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் 48 ஓட்டங்களையும் ட்ராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை இந்தியா அணி நாளை தொடரவுள்ளது

ad

ad