புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2020

முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல்- உலக தமிழர் பேரவை

www.pungudutivuswiss.com
முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை பாராட்டும் அதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என கருதப்படுபவர்கள் அனைவரினதும் உடல்களையும் கட்டாயமாக தகனம் செய்வதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அர்த்தமற்ற பாரபட்சமான இந்த நடவடிக்கை கைவிடப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களையும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறும் உலக தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் இலங்கை அரசின் இ;ந்த கொள்கை முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடும் சீற்றத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை அவர்களது மதநம்பிக்கையின் படி உடல்களை அடக்கம் செய்யவேண்டியது கட்டாயம் என சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரசினால் முஸ்லீம் சமூகமே அளவுக்கதிகமான விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை அந்த சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.
📷 இந்த துஸ்பிரயோக கொள்கை பரந்துபட்டது,தகனம் செய்யப்பட்ட பல முஸ்லீம்களின் உடல்கள் கொரோனாவினால் பாதிக்கப்படாதவை – சோதனைக்கு உட்படுத்தப்படாதவை என தகவல்கள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள உலக தமிழர் பேரவை தங்கள் நேசத்துக்குரியவர்களின் உடல்களை தகனம் செய்வது அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீயசெயல் எனகருதப்படுவதால் பலர் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையில் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ளவிரும்பவில்லை என தெரிவித்துள்ளதுடன் பல முஸ்லீம்கள் தங்களின் உயிரிழந்தவர்களை பொறுப்பேற்க மறுக்கும துன்பியல் செயற்பாடு அரசாங்கத்தின் கொள்கை காரணமாக உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்த கொள்கையை பின்பற்றுவதற்கான- ஒருவருக்கு மரணத்தின் போது கிடைக்கவேண்டிய கௌரவத்தினை மறுப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லை ,என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டுதல்களில் உடல்களை புதைப்பதால் பொதுசுகாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது,உலகின் அனைத்து நாடுகளும் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன – இலங்கையை இந்த விவகாரத்தில் வித்தியாசமான நாடாக மாற்றியுள்ளன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. செல்வாக்குள்ள பௌத்தமதகுருமாரின் அழுத்தங்கள் காரணமாகவே உயர் அதிகாரிகள் தங்கள் வழிகாட்டுதல்களை கட்டாயமாக உடல்களை தகனம் செய்யவேண்டும் என மாற்றினார்கள்,பாதிக்கப்பட்ட 14 குடும்பங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் நிராகரித்தது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
📷 உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரிக்கும் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் அதன் தீவிரவாத ஆதரவு சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக மாலைதீவில் உடல்களை அடக்க செய்யும் வழமைக்கு மாறானதொரு முயற்;சியை மேற்கொண்டது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் இலங்கை பயணிக்கும் திசையை கேள்விக்கு இடமின்றி சுட்டிக்காட்டுகின்றன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கட்டாயமாக உடல்களை தகனம் செய்யும் கொள்கை விதிவிலக்கானது இல்லை மாறாக ராஜபக்ச அரசாங்கத்தின் பரந்துபட்ட நிகழ்ச்சிநிரலின் பொருத்தமான ஒரு அம்சம். ஒருவருடகாலத்திற்குள் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வருந்தத்தக்க நடவடிக்கைகளான சர்வாதிகார போக்குடைய 20 வது திருத்தத்தினை நிறைவேற்றியது,அதிகாரவர்க்கத்தினை இராணுவமயப்படுத்தியமை – கண்காணிப்பு அச்சுறுத்தல் தடுத்துவைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டமை- ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகியமை இலங்கை மெதுவாக ஜனநாய அரசாங்கத்திலிருந்து ஏதேச்சதிகார அரசாங்கத்தை நோக்கி மாறுவதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.’

ad

ad