புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2020

புதுவருட இரவிற்கு மூடப்படும் மெட்ரோ நிலையங்கள்! மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்!! கடுமையான காவற்துறைச் சோதனை!!

www.pungudutivuswiss.com

30 December, 2020, Wed 18:21   |  views: 4067

 புதுவருட இரவான 31ம் திகதிக்கும் முதலாம் திகதிக்குமான இரவில் பிரான்சில் 20h00 மணி முதல் காலை 06h00 மணி வரை ஊரடங்குச் சட்டம் கடைப்பிடிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் மீளத் தெரிவித்துள்ளது.

 
அதனையும் தாண்டிய முக்கிய அத்தியாவசிய நகர்வுகளிற்காக ஊரடங்கு நேரத்திலும் பொதுப் போக்குவரத்துக்கள் இயக்கப்டபடுவது வழமை. 
 
ஆனால் பிரத்தியேகமாக, டிசம்பர் 31 இற்கும் ஜனவரி1 இற்குமான இரவில்,  1, 2, 4, 6, 8, 9, 13, 14   ஆகிய அணிகள் வழமை போல் சேவை இறுதி வரை இயங்கும். ஆனால் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு அந்த நிலையங்களிற்கான சேவைகள் 20h00 மணியுடன் தடைப்பட உள்ளன.
 
அத்துடன் 3, 5, 7, 10, 11  ஆகிய அணிகளில் அனைத்துச் சேவைகளும் 21h00 மணியுடன் நிறுத்தப்பட உள்ளன.
 
பின்வரும் மெட்ரோ மற்றும RER நிலையங்கள் வியாழக்கிழமை மாலை 20h00 மணியுடன் மூடப்படுகின்றன.
 
 
ஏனைய RER சேவைகள் 21h00 மணியில் இருந்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளாக 30 நிடமிடத்திற்கு ஒன்றும், சில சேவகைள் மணித்தியாலத்திற்கு ஒன்றாகவும் மட்டுமே இயங்கள் உள்ளன.
 
பணி முடிந்து திரும்புபவர்களிற்காகவே இந்தச் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும், காவற்துறையினரின் சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad