புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2021

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக கூட்டணி

www.pungudutivuswiss.com
சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. கூட்டணி தயாராகி வருகிறது. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கிரசுக்கு கடந்த தேர்தலில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதே போல் இந்த தேர்தலிலும் 40 தொகுதிகளுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டும் என்பது கொங்கிரசின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் கடந்த முறை கொங்கிரஸ் பல தொகுதிகளை இழந்ததால் தி.மு.க.வின் ஆட்சி கனவே சிதைந்து போனது. எனவே இந்த தேர்தலில் கொங்கிரசுக்கு குறைந்த அளவிலேயே தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. மற்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி எதுவும் பேசவில்லை. இதற்கு காரணமும் தொகுதி பங்கீடு இழுபறிதான் என்று கூறப்படுகிறது. இது தி.மு.க. தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் உயர்மட்ட தலைவர்களிடையே பேசி தீர்வு காண ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகே கடைசி நாள் பிரசாரத்தின்போது முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பதை ராகுல் பேசினார்.

மேலும் கொங்கிரசுக்கு எவ்வளவு தொகுதிகள் என்று கேட்டபோது பொது வெளியில் சொல்ல முடியாது. நாங்கள் பேசி முடிவு செய்வோம் என்று கூறி சென்றார்.

இந்த நிலையில் கொங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் பட்டியலை வழங்கும்படி கேட்டுள்ளனர். அடுத்த 3 நாட்களுக்குள் பட்டியலை தரும்படி கேட்டுள்ளார்கள்.

கொங்கிரஸ் கேட்கும் தொகுதிகளின் கள நிலவரம் கொங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார் என்பதையெல்லாம் தி.மு.க. தரப்பில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றி வாய்ப்பின் அடிப்படையிலேயே கொங்கிரசுக்கான தொகுதிகளை வழங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கொங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, கொங்கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதிகள் மற்றும் கொங்கிரசுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம்.

எனவே பட்டியல் வழங்குவதில் பிரச்சினை இல்லை. ஆனால் 35 முதல் 40 தொகுதிகள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்றார்கள்

ad

ad