புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2021

திருகோணமலையின் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகூட்டமைப்பின் வசமிருந்த பொதுஜன முன்னணிக்கு உரித்தானது.

www.pungudutivuswiss.com
திருகோணமலையின் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகூட்டமைப்பின் வசமிருந்த பொதுஜன முன்னணிக்கு உரித்தானது.திருகோணமலையில் 25 வருட ஆட்சியை மகிந்தவிடம் இழந்த சம்மந்தன்

திருகோணமலையின் பட்டினமும் சூழலும் என்கின்ற பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்விகண்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த அந்த சபையின் அதிகாரம் இன்றுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உரித்தானது.



இதுகுறித்து மொட்டுக்கட்சி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.



அதில் மேலும் தெரிவிக்கப்ப்டடுள்ளதாவது,



25 வருடங்களுக்கும் அதிகமான காலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த உப்புவேலி பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசம்…



மாகாண சபை தேர்தல் வரலாற்றின் ஆரம்பம்தொட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த உப்புவேலி பட்டினமும் சூழலும் பிரதேச சபையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. அதற்கமைய பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவம் செய்துவரும் ஆர்.ஏ.ரி.எஸ்.டீ ரத்நாயக்க இன்று காலை (15.01.2021) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.



திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதுடன், அதில் உப்புவேலி பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07

உறுப்பினர்களுடன் சபையை கைப்பற்றியது. இந்த பிரதேச சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டமானது இரண்டு முறை தோல்விகண்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பலத்தை இழந்துள்ளதை தொடர்ந்து இன்று (15.01.2021) நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆர்.ஏ.ரி.எஸ்.டீ ரத்நாயக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்பில் 12 வாக்குகள் ஆதரவாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு 10 வாக்குகளே கிடைத்தன.



அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 05 உறுப்பினர்களுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற 02 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 02 உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை ஈ.பி.டி.பியிற்கே செலுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad