புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2021

பிரான்ஸ் முழுவதும் 18h00 மணி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
கொரெனாத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 16ம் திகதி 18h00 மணி முதல் இந்த ஊரடங்கு உத்தரவானது நடைமுறைக்கு வருகின்றது.
அனைத்துவிதமான வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் அனைத்தும் 18h00 மணிக்கு மூடப்படல் வேண்டும். உணவு விநியோக சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் (Uber Eats, Delivroo etc..)
தொடருந்து மற்றும் விமானப் பயணங்களை மேற்கொள்பவர்கள், தகுந்த அத்தாட்சிப் பத்திரங்களுடனும், பயணச்சீட்டு ஆதாரத்துடனும், 18h00 மணிக்குப் பின்னரும் செல்ல முடியும்.
உயர்கல்விப் பாடசாலைகள் 18h00 மணிக்குப் பின்னரும் வகுப்புகள் முடிவடைந்தால் தகுந்த அத்தாட்சிப் பத்திரத்துடன் வீடு செல்ல முடியும்.
மேலதிக விபரங்கள் தொடர்ந்து உங்களிற்கு வழங்கப்படும்.

ad

ad