புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2021

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர்.

அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் காவல்துறையினரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டதை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற் தடையையும் உடைத்து உள்ளே சென்ற மாணவர்களும் சட்டத்தரணி க.சுகாஷும் உறுதி செய்தனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. பின்னர் வருகை தந்த காவல்துறையினரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழக வாயில் முன் பெரும்பாலானோர் அமர்ந்து இருக்கின்றனர். எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற அச்ச நிலை காணப்படுகிறது.

ad

ad