புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2021

படு குழி நோக்கி பாயும் பிரிட்டன்: 1,325 பேர் சாவு: 68,000 ஆயிரம் பேருக்கு EXCEL மண்டம் மீண்டும் வைத்தியசாலையாக மாறியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இன்று மட்டும் 1,325 பேர் இறந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் பிரித்தானிய சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் இவை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் லண்டனை சம்பவம் இடமாக சாதிக் கான் அறிவித்துள்ளார். அதாவது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டத்தை அவர் கொண்டு வந்து உள்ளார்.

இது இவ்வாறு இருக்க இன்று மட்டும் 68,000 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மேலும் பலர் ஐ.சி.யூ பிரிவுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. வைத்தியசாலைகள் நிரம்பி வழிவது ஒரு புறம் இருக்க. அவசர சேவைப் பிரிவும் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் எக்ஸெல் மண்டபத்தை மீண்டும் தயார் செய்து வருகிறது பிரித்தானிய அரசு.

ad

ad