புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2021

ரஞ்சனை சபைக்கு அழைத்து வராது எம்.பி பதவியை பறிக்க சதித் திட்டம்-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவராது அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் சதித்திட்டமே தீட்டப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவித்தாவது, ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு இந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். ரஞ்சன் ராமநாயக்க இன்னமும் பாராளுமன்ற உறுப்பினர்தான். அவரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளது. அதற்கு சபாநாயகர் தான் பொறுப்பு. சபாநாயகர் இந்த விடயத்தில் தலையீடு செய்து ரஞ்சன் ராமநாயக்கவை வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.  

இந்த விடயம் தொடர்பில் நான் சபையில் கேள்வியெழுப்பியிருந்த தருணத்தில் மூன்று வாரங்களில் பதிலளிப்பதாக சபாநயகர் கூறியிருந்தார். ஆனால், இன்னமும் எவ்வித அறிவிப்பையும் அவர் பாராளுமன்றில் விடுக்கவில்லை.  

ரஞ்சன் ராமநாயக்க மூன்று மாதங்கள் பாராளுமன்றத்திற்கு வராவிடின் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விட்டதாக சபாநாயகர் அறிவிப்பார். அதற்கான பின்புலமே உருவாக்கப்படுகிறது.  

பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியுமென்றால் ரஞ்சன் ராமநாயக்கவும் அழைத்துவர வேண்டும். ஏன் அந்த தீர்ப்பை வழங்க முடியாதுள்ளது. கேள்விகள் எழுப்பப்படும் போது கதிரையைவிட்டு அகன்று செல்வதே சபாநாகரின் நடவடிக்கையாகவுள்ளது. மூன்று வாரங்கள் என்றார். தற்போது ஐந்து வாரங்கள் கடந்துவிட்டது. ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றம் அழைத்துவராது அவரின் எம்.பி. பதவியை பறிக்க முற்படுவது மிகவும் தவறான செயற்பாடாகும். ஆகவே, நாளை (இன்று) அவரை பாராளுமன்றம் அழைத்துவர வேண்டும் என்றார்.  

ad

ad