பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான பேரணி இன்று நண்பகல் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வெலிஓயா ஊடாக பல்வேறு தடைகளை தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா சந்தியில் இருந்து அரசியல் வாதிகளால் வரவேற்கப்பட்ட பேரணி,
தொடர் மத ஆக்கிரமிப்பின் சின்னமாக காணப்படும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டுக்களை மேற்கொண்டு கவனயீர்ப்பு நடத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் உடுப்புக்குளம் சந்தி பகுதியில் பேரணியினை வரவேற்று கவனயீர்ப்பினை நடத்தி அதில் இருந்து வாகன தொடர்அணி முல்லைத்தீவு நகரில் உள்ள புனித இராஜப்பர் தேவாலய முன்றலில் இருந்து முல்லைத்தீவு நகரினை சென்றடைந்து மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பினை முன்னெடுத்து அதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி