புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2021

அதிகரிக்கும் பிரித்தானிய - தென்னாபிரிக்க வைரஸ்கள் - ஆபத்தில் இல்-து-பிரான்ஸ்

www.pungudutivuswiss.com
இன்று பிரான்சில் உருமாறிய கொரோனா வைரசின் தொற்று மிகவும் உச்சமாகி வருகின்றது. ஆபத்தின் நிலை உணராது, உள்ளிருப்பை அறிவிப்பதற்கான நிலைமை இன்னமும் இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறையினரால் இந்த முடிவும் அவர் உனயோகித்த வார்த்தைகளும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சில் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 3.5மூ ஆக இருந்த பிரித்hனிய ரைவசின் தொற்று, கடந்த 27ம் திகதி ஜனவரி மாதத்தின் கணக்கின்படி இது தேசிய அளவில் 13.8% ஆக அதிகரித்துள்ளது. மூன்று வாரத்திற்குள் நானஇகு மடங்காக அதிகரித்துள்ளது.
இது பெரும் தொற்றலையை இன்னமும் சில நாட்களில் வரும் வாரங்களில் ஏற்படுத்தி பெரும் ஆபத்தை உருவாக்கும் என தொற்றியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தேசிய அளவில் அன்றாடத் தொற்றின் 13.8% ஆக இருக்கும் பிரித்தானிய வைரிசின் தொற்று இல்-து-பிரான்சில் 20% ஆக உயர்ந்துள்ளது. இது வரும் வாரங்களில் 100% ஆகும் பேராபத்து உள்ளது;
கொரோனத் தொற்றின் மிகவும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருந்த போத்துக்கல் பிரித்தானிய வைரசின் 100% தொற்றினால் இன்று பேராபத்திற்குள் சிக்கி உள்ளது.
போத்துக்கலின் ஆபத்து பிரான்சிற்கான எச்சரிக்கை மணியாகும்.

ad

ad