புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2021

திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால், காங்கிரஸ் தனித்துபோட்டி அல்லது 3-வது அணி -நிர்வாகிகள்

www.pungudutivuswiss.com
திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால், தனித்துபோட்டியிட வேண்டும் அல்லது 3-வது அணியில் சேர்ந்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கூறி உள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், ஆனால் 24 தொகுதிகளை மட்டுமே அளிக்க திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது. அந்தவகையில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகளும் (34 தொகுதிகளில் வெற்றி), 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களும் (5 தொகுதிகளில் வெற்றி), 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளும் (8 தொகுதிகளில் வெற்றி) ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad