புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2021

யாழ். றோயல் அணியை வீழ்த்தி சம்பியனானது புரோன்ஸ் அணி

www.pungudutivuswiss.com
பந்து வீச்சு, களத்தடுப்பில் அதிரடிகாட்டிய நல்லூர்புரோன்ஸ் அணி. யாழ்.றோயல் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன்னானது.

யாழ். வீரர்களுக்கான தேடல் என்ற தெனிப் பொருளில் ஞானம் பெயின்ட்ஸ் சம்பியன் கிண்ணத்துக்கான கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பாணம், சென். பற்றிக்ஸ் கல்லூரி ஆடுகளத்தில் இடம் பெற்றது.

இறுதியாட்டத்தில் நல்லூர் புரோன்கோஸ் அணியை எதிர்த்து யாழ். றோயல் அணி மோதிக் கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று நல்லூர் புரோன்கோஸ் அணி துடுப்பெடுத்து விளையாட தீர்மானித்து. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நல்லூர் புரோன்கோஸ் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அதிகபட்சமாக பிரியலக்சன் 35 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்களாக 22 ஓட்டங்களையும், டார்வின் 34 பந்துகளில் 2 சிக்சர் அடங்களாக 16 ஓட்டங்களையும், லதுசன் 9 பந்துகளில் 2 பவுண்டரி அடங்களாக 21ஓட்டங் களையும் தமது அணி சார்பாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் யாழ். றோயல் அணி சார்பில் பிரசன்னா 4 பந்துப் பரிமாற்றங்கள் பந்து வீசி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் ஜிந்துஷன் 4 பந்துப் பரிமாற்றங்கள் பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி யென பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். றோயல் அணியினர் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 96 ஒட்டங்களை மட்டுமே பெற்றது.

இதில் அதிகபட்சமாக அருண்குமார் 44 பந்துகளில் 4 பவுண்டரி, அடங்களாக 36 ஓட்டங்களையும், பிரசன்னா 20பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடங்கலாக 26 ஓட்டங்களையும், தமது அணி சார்பாக, பெற்றுக் கொடுத்தனர்.


பந்து வீச்சில் நல்லூர் புரோன்கோஸ் அணி சார்பில் சஜீபராஜ் 4 பந்துப் பரிமாற்றங்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், குகசதுஸ் 2 பந்துப்பரி மாற்றங்கள் பந்து வீசி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதினை யாழ்.றோயல் அணி வீரர் வி.வாமனன் பெற்றுக் கொண்டார்.

மதிப்புமிக்க வீரருக்கான விருதினையும், அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய வீரருக்கான விருதினையும், யாழ். றோயல் அணி வீரர் எஸ். பிரசன்னா பெற்றுக் கொண்டார்

அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரருக்கான விருதினை யாழ். றோயல் அணி வீரர் கே.ஜானுதாஸ் பெற்றுக் கொண்டார்.

நன் நடத்தை அணிக்கான விருதினை சுண்டுக்குளி ஈக்கிள்ஸ் அணியும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை சுண்டுக்குளி ஈக்கிள்ஸ் அணி வீரர் எம்.அபினாஷ் பெற்றுக் கொண்டார்.

ad

ad