புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2021

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், சுவிஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் இஸ்லாமிய புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமாக்குவதற்கான ஒரு பிரிவை அறிமுகப்படுத்தும்.

அவ்வாறு செய்யும்போது, இதுபோன்ற ஆடைகளை ஏற்கனவே பொதுவில் தடை செய்துள்ள அண்டை நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்துகொள்ளும்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான இறுதி முடிவுகளில் நாட்டின் 26 மண்டலங்களில் ஆறு மட்டுமே இந்த முயற்சியை நிராகரித்தது தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக புர்கா தடை முடிவுக்கு 51.2% மக்களே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

130 ஆண்டுகளில் சுவிஸ் மக்களின் முன்முயற்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது இது 23 வது முறையாகும், மட்டுமின்றி 2014 க்குப் பிறகு இது முதல் முறையாகும் என தெரிய வந்துள்ளது.

சுவிஸில் புர்கா தடை என்பது தேவையற்றது என்ற அடிப்படையில் தடையை எதிர்த்த அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இந்த முடிவு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆனால், சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் 400,000 இஸ்லாமியர்களில் மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே இதுபோன்ற முகம் மறைக்கும் ஆடைகளை அணிவதாக நீதித்துறை அமைச்சர் Karin Keller-Sutter சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த பொது வாக்கெடுப்பானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தாம் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ad

ad