புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2021

பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள..மஹிந்த ராஜபக்ஷ இடையிலான கலந்துரையாடல்!

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று(02) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீடுகள் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்டடங்களும் போதுமானதாக இல்லை எனவும் இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மேலதிகமாக 10,600 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ad

ad