அண்மையில் உணவகம் ஒன்றில் உணவருந்திய 110 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு பரிசில் உள்ள மற்றுமொரு உணவகம் மூடப்பட்டுள்ளது. பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக உணவருந்திக்கொண்டிருந்த 30 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறையினரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் உடன்படவில்லை. காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருசிலர் காவல்துறையினரை தாக்கவும் செய்தனர்.
அதன் முடிவில் ஐவர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு உணவகம் மூடப்பட்டுள்ளது.