புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2021

மொட்டுவின் கூட்டணிக்குள் வெடித்தது பூகம்பம் பங்காளி கட்சிகளை அவசரமாக சந்திக்கிறார் மகிந்த

www.pungudutivuswiss.com
ஆளும் தரப்பான மொட்டு கூட்டணிக்குள் பங்காளி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பூகம்ப நிலையை அடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மகிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

பங்காளி கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.

அரசில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகள் பொலநறுவையில் தனியாக மேதின பேரணியை நடத்தவுள்ளன.அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தமது மேதின பேரணியை பொலநறுவையில் நடத்தவுள்ளது.சுதந்திரக்கட்சியின் மேதின பேரணியில் பங்குபற்ற அரசில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளன.

இதேவேளை பொதுஜனபெரமுன தனியாக மேதின பேரணியை நடத்தவுள்ளது.

இந்தநிலையிலேயே மகிந்தவுடனான சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்த சந்திப்பின்போது கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு முடிவு கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad