புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2021

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது

www.pungudutivuswiss.com

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி

நேர விசாரணையின் பின்னர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.

யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டது.

மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழு பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரிடம் தண்டம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார்.

அந்தக் குழுவுக்குப் பயன்படுத்திய சீருடை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதையடுத்து குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். அந்தச் சீருடைகளைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும், சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விசாரணைக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 6 மணி நேர விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad