புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2021

பலாலி வடக்கு உள்ளிட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

www.pungudutivuswiss.com
பலாலி வடக்கு உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பலாலி வடக்கு உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பொலிஸ் பிரிவில், கல்மடு கிராம சேவகர் பிரிவும், மொனராகல மாவட்டத்தில் செவனகல பொலிஸ் பிரிவில், 6 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad