புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2021

உள்ளகப் பொறிமுறை தோல்வி! சர்வேதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு

www.pungudutivuswiss.com
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கடந்த 12 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

எனினும் இதற்காக முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதற்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மறுக்கக்கூடாது. அதேவேளை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர், அவர்களது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.

எனினும் அவர்களுக்கான நீதிவழங்கலும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படுவது குறித்து கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனிர உரிமைகள் பேரவையில் முக்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் மேமாதம் என்பது, போரின் போது சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக உயிரிந்தவர்களை நினைவுகூர்வதற்கான மாதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad