புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2021

தொண்டாமுத்தூர்: ஸ்டாலினின் வைத்த செக் ஐ தூக்கி சாப்பிட்ட அதிமுக எஸ்.பி வேலுமணி.எப்படி அமோகவெற்றி பெற்றார்

www.pungudutivuswiss.com
கொங்கு மண்டலத்தின் தேர்தல் வெற்றியைத் தனக்கான பொறுப்பாக தோளில் சுமந்த வேலுமணிக்கு, தான் போட்டியிட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது பெரும் கௌரவ பிரச்னையாக இருந்தது.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக அமைச்சர்களில் கட்டாயம் தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும் எனத் திமுக பட்டியலில் இடம்பெற்றவர்களில் முதலாவதாக இருந்தவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான். அந்த அளவுக்கு அவர் மீது கடும் கோபத்தில் இருந்தது திமுக.

1996 ஆம் ஆண்டுக்கு பிறகான சட்டமன்ற தேர்தலில், இந்த முறைதான் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதின. இதுவரை, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மட்டுமே இத்தொகுதியில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு வந்தன. ஆனால், வேலுமணி தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த முறை தொண்டாமுத்தூர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்குகொடுக்காமல், தானே வைத்துக் கொண்ட திமுக, வேலுமணிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்னிலை வகித்தவர்களில் ஒருவரான, கார்த்திகேய சிவசேனாபதியை நிறுத்தியது. இதனால், 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணிக்கு, இந்த முறைபோட்டி கடும் சவால் மிக்கதாக மாறியது.

வேலுமணி
வேலுமணி
தொண்டாமுத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சிவேட்பாளர் செய்யது என்பவரை 64,041 வாக்குகள் வித்தியாசத்தில் வேலுமணி தோற்கடித்திருந்தார். அப்போது திமுக நேரடியாக களமிறங்காததும் தோல்விக்கு காரணமாக பேசப்பட்டது. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி களம் மிகுந்த கவனம் பெற்றது. கொங்கு மண்டலத்தின் தேர்தல் வெற்றியைத் தனக்கான பொறுப்பாக தோளில் சுமந்த வேலுமணிக்கு, தான் போட்டியிட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது பெரும் கௌரவ பிரச்னையாக இருந்தது. வேலுமணியைப் பொறுத்தவரை, எடப்பாடி அமைச்சரவையில் கிட்டத்தட்ட நிழல் முதல்வர் போன்றே வலம் வந்தார் எனச் சொல்லும் அளவுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதியின் வாக்காளர்களில் கணிசமானோர் இஸ்லாமியர்களாக உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தில் அதிமுகவின் நிலைபாடுமற்றும் பாஜக கூட்டணி உள்ளிட்ட காரணங்கள், இத்தேர்தலில் வேலுமணிக்கு மைனஸாக பார்க்கப்பட்டது.

மேலும், வன்னியர்களுக்கு ஆதரவாக 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதும், இந்த தொகுதியை சேர்ந்த பிற சாதியினர் மத்தியில் அதிமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.



பல மைனஸ்கள் கடுமையான போட்டி, ஊழல் குற்றச்சாட்டு என பலவும் சொல்லப்பட்ட போதும் இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே முன்னணியில் இருந்தார் வேலுமணி. பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டது அதுவும் வேலுமணிக்கு சாதகமாகவே நிலையே தொடர்ந்தது. இதனால் தொடர்ந்து வேலுமணி முன்னிலை வகித்தார். ஜல்லிக்கட்டு போராட்ட வெளிச்சம் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு என்ன வலம் வந்த கார்த்திகேய சேனாபதியை 41,709 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார் வேலுமணி. வேலுமணியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என நினைத்த ஸ்டாலினின் கனவு பலிக்காமல் போனது.

ad

ad