புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2021

பா.ஜ.க-வை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஓடவிட்ட மம்தா

www.pungudutivuswiss.com
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதன் படி ஆரம்ப முதலே, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதன் படி ஆரம்ப முதலே, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.

ஏனெனில் இந்த முறை எப்படியாவது மேற்குவங்கத்தில் ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாஜக இங்கு 200 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் இழுபறியோ அல்லது தொங்கு சட்டப்பேரவையோ அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இதை எல்லாம் பொய்யாக்கி விட்டு, திரிணாமுல் காங்கிரஸ் யார் எதிர்பாராத வகையில் 202 தொகுதிகளில் பிடித்து அமோக வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறிய பாஜ.வுக்கு 88 இடங்களே கிடைத்தன.

இதன்மூலம், இதன் ஆட்சி கனவு தகர்ந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், வீல்சேரில் அமர்ந்து கொண்டே மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து. இந்த வெற்றியை அவர் பறித்துள்ளார்.

இதன்மூலம், அரசியல் வட்டாரத்தில் அவரை மேற்கு வங்க பெண் சிங்கம் என்று அழைக்கின்றனர். அதன்படி, தான் ஒரு பெண் சிங்கம்தான் என்பதை அவர் நிரூபித்தார். சற்று முன் வரை மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளின் 205 இடங்களில் திரிணாமுல் காங்கிரசும், பாஜக 85 இடங்களிலும், மற்ற இரண்டு கட்சிகள் ஒவ்வொரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது

ad

ad