புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2021

ஸ்டாலின் அதிரடி- அதிமுக உறுப்பினர்களை சட்டமன்ற ஆலோசனை குழுவில் இணைத்தார்- ஒரே பரபரப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 13 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளார்கள் என்பது அதிரடியான விடையம்.


இந்த குழுவில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் சி விஜய பாஸ்கர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல ஏ எம் முனி ரத்தினம் (காங்கிரஸ்), ஜி கே மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), மருத்துவர் சதன் திருமலை குமார் (மதிமுக) எஸ் எஸ் பாலாஜி (விசிக) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, நாகை மாலி (சிபிஎம்), ராமசந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா(மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் பெற இந்தக் குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் செயலராக பொதுத்துறைச் செயலர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்கட்சியாக இருந்தாலும் தற்போது அவர்களுக்கும் ஆழும் கட்சியின் அதிகாரங்களை கொடுத்துள்ளார் ஸ்டாலின். இதனை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. போற போக்கில் அதிமுக கட்சியினரே ஸ்டாலினை வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள் என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது. அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு செல்கிறார் ஸ்டாலின். என்பது ஒரு புதிய திருப்பு முனையாக உள்ளது

ad

ad