புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2021

கொவிட் தொற்றுக்குள்ளாக 8000 பேர் வீடுகளில் - மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து

www.pungudutivuswiss.com
கொவிட் தொற்றுக்குள்ளான 8000 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப முடியாமல் வீடுகளில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கடந்த 31ஆம் திகதி வரை கொவிட் தொற்றுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் ஒக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ள 330 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒக்ஸிஜன் வழங்கப்பட வேண்டிய 149 நோயாளிகள் 27ஆம் திகதி வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் 4 நாட்களுக்குள் மேலும் 120 நோயாளிகள் ஒக்ஸிஜன் தேவையுடன் அனுமதிக்கப்பட்டனர். 31ஆம் திகதிக்குள் அந்த நோயாளிகளின் எண்ணிக்கை 330ஆக அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் சுகாதார துறைகள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்ப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

ad

ad