புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2021

பருத்தித்துறையில் 2 ஆலயங்களுக்கு சீல்! - தேர்த் திருவிழாவின் விளைவு.

www.pungudutivuswiss.com
பருத்தித்துறை சிவன் ஆலயம், சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன.


பருத்தித்துறை சிவன் ஆலயம், சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன.

இன்று பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற இரதோற்சவத்தில் கலந்து கொண்ட அதிகளவான பக்தர்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு ஒளிப்படத்துடன் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய அப்பகுதிக்குச் சென்று விசாரணையை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், சுகாதார நடைமுறைகளை பேண தவறியமைக்காக, ஆலயத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.

இதேவேளை பருத்தித்துறை சிவன் ஆலயத்திலும் சுகாதார நடைமுறைகளை மீறி,வெளி வீதியில் திருவிழாவை நடத்தியமைக்காக அந்த ஆலயத்தின் வழிபாடுகளையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலய நிர்வாகிகளும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad