புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2021

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை - கூட்டமைப்பு வரவேற்பு!

www.pungudutivuswiss.com



ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

“ ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட மனித உரிமை உயர் ஸ்தானிகரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.

விசேடமாக, அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என்று ஜனாதிபதி கொடுத்த உத்தரவாதத்தை செயலில் காண வேண்டும் என்று வலியுறுத்தியள்ளதை நாம் அவதானித்துள்ளோம். இலங்கையில் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தையும், வேறு சட்ட ஆட்சிக்கு முரணான விடயங்களையும் சுட்டிக் காட்டியதையும் வரவேற்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான திடமான நிலைப்பாட்டுக்காக நன்றி செலுத்துகிறோம். அதேபோல், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறிமுறை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ad

ad