புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2021

ஐ.நாவின் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை!

www.pungudutivuswiss.com





ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தெரிவித்துள்ளார்.


ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தெரிவித்துள்ளார்

இத்தாலியில் இடம்பெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் பக்க நிகழ்வாக திங்கட்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார கொள்கை மற்றும் மதம் என்ற தொனிப்பொருளிலான வெளிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடலின் போதே பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மதம் மற்றும் வெளிவிவகார கொள்கை என்பவை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிளது இன்று முக்கியமாகின்றது. வெளிவிவகார கொள்கை வகுப்பில் ஐக்கியப்பட வேண்டும். பிளவுப்பட்டு அல்லது கடுமையான நிலைப்பாட்டிலிருந்தோ அதனை செய்ய இயலாது. புவிசார் அரசியல் மற்றும் கலாசார வேறுப்பாடுகளுடன் அணிசேரா அமைப்பில் இணைந்து செயற்பட்டால், அரசியலுடன் மதம் கலந்துள்ளமையானது சிறந்த விடயமாக கருத முடியாது.

இது வெளிவிவகார கொள்கைகளில் தாக்கம் செலுத்தும் மறுப்பும் உள்ள கொள்கை வகுப்புகளுக்கும் சவால்களை ஏற்படுத்துகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின்செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை.

அங்குள்ள விதிமுறைகள் ஆதிக்கப்போக்கில் கடும்போக்குவாத நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த நிலையானது எம்மை போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாகின்றது. அனைத்துலக கொரோனா தொற்றினால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை 4.2 பில்லியன் டொலர் வருவாயை இழந்துள்ளது.

ஏனைய துறைகளும் அவ்வாறானதொரு நிலையிலேயே உள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபையை கடும்போக்குவாத நாடுகள் தமது தேவைகளுக்கு பயன்படுத்துவதாகி விட கூடாது. உலகத்தில் ஒரு பகுதிக்காக அல்ல அனைத்துலக நாடுகளுக்குமானதாக இந்த அமைப்பு அமைய வேண்டும் என தெரிவித்தார்.

ad

ad