புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2021

படைகளின் சித்திரவதைகளும் முதன்மை பெற வேண்டும்-யஸ்மின் சூக்கா

www.pungudutivuswiss.com
ஜெனீவாவில் இலங்கையைப் பற்றி விவாதிக்கும் போது, பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறல்வேண்டும். காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டால் மாத்திரம் போதாது என சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.


ஜெனீவாவில் இலங்கையைப் பற்றி விவாதிக்கும் போது, பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறல்வேண்டும். காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டால் மாத்திரம் போதாது என சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் அமைதியான முறையில் தங்கள் குடிமை உரிமைகளைப் பயன்படுத்தும் சிலர் கொடூரமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக மோசமான சித்திரவதைகள் மற்றும் கூட்டு பாலியல் வன்முறைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் சர்வதேச விசாரணையாளர்கள், இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடமிருந்து விரிவான அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் 2019 இல் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானவர்கள். இதில் அதிகமானவர்கள் இந்த ஆண்டு நிகழ்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள். மேலும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள்.

இன்னும் பலர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தன்னார்வலர்களாக பணியாற்றியவர்கள். வெள்ளை வேனில் தாங்கள் கடத்தப்பட்டதாக அறுவர் குறிப்பிட்டனர்.

ஏறக்குறைய அனைவரும் இனவெறி வார்த்தைகளால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட அதேவேளையில் பாலியல் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆங்கில கால்வாயினை இறப்பர் வள்ளங்களில் கடந்து அசாதாரணமான பயணங்களை மேற்கொண்டு இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கொடூர குற்றங்களுக்கு இலங்கை அரசு தண்டனை வழங்கவில்லை. குற்றவியல் பொறுப்புக்கூறல் இல்லாமல் கொடூர குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எந்த ஊக்கமும் கிடைக்கபோவதும் இல்லை.

சர்வதேச சமூகம் அனைத்து சர்வதேச பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை இரத்து செய்ய வேண்டும். காரணம் அவை பயனளிக்கப்போவதில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பல வருடங்களாக மாறியது பாதிக்கப்பட்டவர்களின் தன்மை மட்டுமே. அவர்களில் சிலர் முன்னாள் புலிகள் அல்லது முக்கிய மனித உரிமை ஆர்வலர்கள்.

ஜே.வி.பி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே கடைக்காரர்கள், மின்தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மாணவர்களே இவர்களின் பார்வைக்கு ஆளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad