புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2021

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.ஜெனிவாவுக்கு முன்னணியும் கடிதம்

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் எனவே பொறுப்புக்கூறல் விடயம் பேரவையில் இருக்கும்வரை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கடிதம் மூலம் கோரியுள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து, மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.விக்கியும் தனியாக கடிதம் அனுப்பினார்


அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் ஓர் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கக் கூடியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காணாமல் போன தமிழர்களுக்கு இராணுவமே பொறுப்பு என்ற போதிலும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கான நியமனங்கள் இராணுவத்தினரின் அணிவரிசைகளில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அலுவலகத்தில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதால் தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் தமிழ்ப் பொது மக்கள் அஞ்சுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு சிங்களம் பேசும் பிரதம செயலாளர் வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை, படுகொலைகள் மற்றும் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் தடை ஏற்படுத்தப்பட்டமை குறித்தும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தமது உறவுகளை தேடியும் நீதிகோரியும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய உளவுப் பிரிவுகளால் மிரட்டப்படும் சம்பவம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad