புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2021

www.pungudutivuswiss.comமூத்த கூட்டுறவாளர் திரு. சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் பிறந்த தினத்தை ( 20 . 09 .2021 ) முன்னிட்டு சூழகம் அமைப்பினால் தீவகத்தில் பொதுநலன் செயற்பாடுகள் முன்னெடுப்பு
மூத்த கூட்டுறவாளர் திரு. சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் பிறந்த தினத்தை ( 20 . 09 .2021 ) முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினரால் ( சூழகம் ) தீவகத்தில் பல பொதுநலன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .
சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 40000 நிதியுதவியில் அனலைதீவு கிராமத்தில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 25 குடும்பங்களுக்கும் உலருணவு பொதிகளும் , சுகாதார பாதுகாப்பு பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன . அத்தோடு அனலைதீவு அரசினர் வைத்தியசாலைக்கு ரூபாய் 5000 பெறுமதிமிக்க சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .
மேலும் புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சூழகம் அமைப்பின் நிர்வாககுழு உறுப்பினர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் ரூபாய் 18000 நிதியுதவியில் மேற்படி கழகத்தினருக்குரிய உதைபந்தாட்ட மைதானம் துப்பரவு செய்யப்பட்டது .
இச்செயற்பாடுகளில் சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான சந்திரசேகரம் சிறீதரன் , மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , அனலைதீவு ராஜா , ரதீஷ் , ராகுலன் , ஹெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .
திரு . சுப்பிரமணியம் கருணாகரன் அவர்கள் புங்குடுதீவு - நயினாதீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக மூன்று தடவைகள் ( 1979 , 1984 - 1988 , 2016 - 2019 ) செயற்பட்டிருந்ததோடு புங்குடுதீவு கிராமசபையின் உபதலைவராகவும் , பெருங்காடு கிராம முன்னேற்ற சங்க தலைவராகவும் , புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்க தலைவராகவும் , புங்குடுதீவு மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
Kunalan Karunagaran

ad

ad