புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2021

கனடா தேர்தல் 'சூதாட்டத்தில்' ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு; பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

www.pungudutivuswiss.com
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். 2019இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

விளம்பரம்

கனடா பூர்வகுடி குழந்தைகள் பள்ளியில் பல நூறு சவக்குழிகள்: புதைந்து கிடந்த அதிர்ச்சி
கனடா தமிழ் இருக்கைக்கு கரம் கொடுத்த தமிழர்கள் - கடைசிநேரத்தில் உதவிய தி.மு.க
முக்கிய எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

"கடந்த காலத்தின் நாம் இணைந்து கடந்து வந்த கறுப்பு நாள்களை மறந்துவிடக்கூடாது. இனி வருங்காலத்தை இணைந்து கட்டமைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
"அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெளிவான பாதையை மக்கள் காட்டியிருக்கிறார்கள்" என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

தெளிவான முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், தபால் வாக்குகளை உள்ளடக்கிய முழுமையான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகும் என எதிர்பார்கப்படுகிறது

ad

ad