-

7 நவ., 2021

கூட்டமைப்பைச் சந்திக்கிறது சுவிஸ் உயர்மட்டக் குழு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுவிற்சர்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஆசிய, பசுபிக் உதவிச் செயலாளர், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுவிற்சர்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஆசிய, பசுபிக் உதவிச் செயலாளர், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்

கொழும்பிலுள்ள, சுவிஸ் இல்லத்தில் மாலை 5.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறும். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 எம்.பிக்களும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொள்வார்கள்.

இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியத் தூதருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இடம்பெறும். இதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 எம்.பிக்களும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொள்வார்கள்.

ad

ad