புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2021

பிரான்ஸ் வழியாக ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி

www.pungudutivuswiss.com

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற மற்றொரு புலம்பெயர்ந்தோர் நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில், பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், இரண்டு புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற மற்றொரு புலம்பெயர்ந்தோர் நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில், பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், இரண்டு புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை

நேற்று காலை, கலாயிஸ் பகுதியில் ஒரு சிறிய படகு கரையொதுங்கியுள்ளது. தண்ணீர் நிறைந்திருந்த அந்த படகில் புலம்பெயர்ந்தோர் ஒருவரின் உயிரற்ற உடல் இருப்பது தெரியவந்தது. அதே படகில் குளிர் காரணமாக ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

ஒரு நாளைக்கு முன்பு, இதேபோல் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற ஒரு புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும், மற்றொரு புலம்பெயர்ந்தோர் மாயமானதும் குறிப்பிடத்தக்கது.

அதே நாளில், பல படகுகள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ad

ad