புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2021

உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரிப்பு: ரஷ்யாவுக்கு ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.


இதற்கிடையில், கடந்த மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 90 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்தநிலையில், ரஷ்யா, உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடம் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என அதன் எல்லைப்பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது ரஷ்யா. இதனிடையே உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.இ

ad

ad