புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2021

பட்டம் பெற மறுத்த பட்டதாரிகளுக்கு சோபித தேரர் பாராட்டு!

www.pungudutivuswiss.com



கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி பண்டிதர்கள் தமது துணிச்சலையும் சுயமரியாதையையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் கூறியுள்ள செய்தியை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாநாயக்கர் நாயகம், பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் இதனைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தேரர் தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும், தனிப்பட்ட, அரசியல், உறவினரின் நட்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது, பலரது மௌனத்தையும் மீறி கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டுமென தேரர் தெரிவித்துள்ளார்.

நண்பர்களை நியமித்ததன் மூலம் முழு நாடும் சீரழிந்துள்ளதை ஜனாதிபதி இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ad

ad