புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2021

கோவிட்-19: கனடாவில் 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு!

www.pungudutivuswiss.com

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீப நாட்களில் தேசிய அளவில் 100,000 மக்களில் 92 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் ஆகிய பகுதிகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக காணப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மற்றும் மனிடோபா ஆகிய இரு பகுதிகளும் இந்த 5 பகுதிகளில் முதல் இரு இடங்களில் உள்ளன. இருப்பினும் இந்த இரு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு 92கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கியூபெக் பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை வரையான தரவுகளில் 19,558 பேர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ பிரன்சுவிக் பிராந்தியத்தில், டிசம்பர் 16ம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2,391 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 521 பேர்கள் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூகோன் பிராந்தியத்தில் இதுவரை 1,614 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,559 பேர்கள் குணமடைந்துள்ளதாகவும், 48 பேர்கள் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனிடோபா பிராந்தியத்தில் கடந்த 7 நாட்களில் மட்டும் 1,247 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை 11,730 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மட்டும் 3,124 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ad

ad