புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2021

ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் விளக்கம்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது.

    

அதற்கு ஏற்ற வகையில், கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் புதிதாக கொரோனாவால் 90,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கொரோனா பரவல் குறித்தும், அரசு எடுக்கப்பட கூடிய நடவடிக்கைகள் குறித்தும் வீடியோ ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்..

அதில், தற்போது கொரோனா பரவல் எந்த அளவிற்கு ஆபத்தாக உள்ளது என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், மீண்டும் ஒரு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை.

அதே சமயம் ஒமைக்ரான் வைரஸ் முன்பு நாம் பார்த்தது போன்று இல்லாமல், தொடர்ந்து வேகத்துடன் பரவி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாக, மக்கள் தங்கள் கிறிஸ்துமஸ் திட்டங்கள் பாதிக்கப்படப்படுமோ என்ற சந்தேகத்தில் உள்ளதை நான் அறிவேன்.

இதனால், நான் இன்றிரவு மக்களுக்கு சொல்லக் கூடியது என்னவென்றால், கிறிஸ்துமஸ்க்கு பிறகு எந்த ஒரு கூடுதல் நடவடிக்கைகளையும் எங்களால் நிராகரிக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் தரவுகளை கவனித்து வருகிறோம்.

ஒமைக்ரானின் தீவிரத்தன்மை, மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம், மூன்றாவது தடுப்பூசியின் தாக்கம் பற்றிய நிச்சயமற்ற தன்மை, போன்றவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நிலைமை மோசமடைந்தால், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால், மக்கள் தங்கள் கிறிஸ்துமஸ் திட்டங்களை கொண்டாடலாம்.

நிலைமை சீராக உள்ளது. அதே சமயம் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்க, எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனாவின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். தேவைப்படும்போது வீட்டிற்குள் முகக்கவசம் அணியுங்கள், வயதானவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடிய உறவினர்களைப் பார்வையிடும் முன் பரிசோதனை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad