புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2021

பிரித்தானியாவில் சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய விதி!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதிகளில் அதிரடி மாற்றமாக குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு வாரகாலம் மட்டும் தனிமைப்படுத்தல் போதும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் 7 நாட்களில் முடித்துக் கொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது

புதன்கிழமை முதல் குறித்த விதிவிலக்கானது அமுலுக்கு கொண்டுவரப்படுகிரது. இதனால் 280,000 மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை எஞ்சிய குடும்பத்தினருடன் கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

மேலும், தனிமைப்படுத்தலின் ஆறாவது அல்லது 7வது நாள் முன்னெடுக்கும் கொரோனா சோதனையில் தொற்று பாதிப்பில்லை என கண்டறியப்பட்டால், அவர்கள் எஞ்சிய நாட்கள் தனிமைப்படுத்த தேவையில்லை. 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் இரண்டு முறை கொரோனா சோதனை முன்னெடுப்பது போதுமானதாக இருக்கும் என்றே பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமை குறிப்பிட்டுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்துவதை குறைப்பதே தங்களின் நோக்கம் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இதன் ஒருபகுதியாகவே, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும், தொற்று பாதிப்பில்லை என இருமுறை உறுதி செய்வதுடன், 7 நாட்களில் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டு உற்றார் உறவினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் எனவும் சஜித் ஜாவித் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 15ம் திகதி ஒரே நாளில் 102,875 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் அடுத்த நாள் 95,058 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 17ம் திகதி மேலும் 82,945 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தற்போதைய புதிய விதியால், மீண்டும் முன்னெடுக்கும் சோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் 280,000 பேர்கள் கட்டுப்பாடுகளின்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad