 வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில், இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வழங்க ரெலோ இணங்கியுள்ளது. |