புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2021

EPDP முதல்வராகத் தொடர்கிறார் மணிவரவு - செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!!

www.pungudutivuswiss.com
யாப்பாண மநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 பேர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2 பேர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் என மொத்தமாக 45 உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.



இன்று புதன்கிழமை நடைபெற்ற வரவு - செலவு திட்ட வாக்களிப்பில் திட்டத்திற்கு ஆதரவாக 45 உறுப்பினர்கள் யாழ் மாநகர சபையில் 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும் சிறீலங்கா சுதந்திர கட்சி 2 பேரும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் என 24 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.



வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் வாக்களித்தனர்.

ad

ad