புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2022

பொறிஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சொந்த கட்சி அரசியல்வாதிகளே முயற்சி

www.pungudutivuswiss.com
கொரோனா உச்சம் தொட்டு இருந்தவேளை, பிரிட்டன் பிரதமர் ரகசியமாக நடத்திய கழியாட்ட பார்டி விடையத்தில், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சம் மீது மக்கள் பெரும் அதிருப்த்தியடைந்துள்ளார்கள். இதனால் அவர் அங்கம் வகிக்கும் கான்சர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில். அடுத்த தேர்தலில் கான்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணத்தால் கான்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், பொறிஸ் ஜோன்சனை உடனே பதவி விலகுமாறு கோரி வரும் நிலையில்.


அவர் கட்சியில் அங்கம் வகித்த ஒரு MP எதிர்கட்சியான லேபர் கட்சிக்கு சென்றுவிட்டார். மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகியும் உள்ளார். இதனால் பெரும் அழுத்தத்திற்கு பிரதமர் ஆளாகியுள்ளார். இன் நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவது குறித்த அவரது சொந்த கட்சியே ஆராய்ந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad