அதன்படி சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாண சபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பேரவை செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை, பதில் பிரதி பிரதம செயலாளராகவும் பணியாற்றி வந்த, பற்றிக் ரஞ்சன் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராகச் செயற்படுவார். ஆளுநரின் செயலாளராகத் தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவித்தல் நேற்று மாலையே தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |