 கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில், அவரது உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 26 வயதுடைய பிரசாந்தி அர்ச்சுனன், யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. |