புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2022

யுக்ரேன் எல்லையில் இருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள்: முக்கிய தகவல்கள் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி: பிப்ரவரி 16 ஏன் முக்கியம்?

www.pungudutivuswiss.com
பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

''மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன் அதிபர் உறுதிசெய்யவில்லை; அந்தச் செய்திகள் குறித்து சந்தேகம் வெளியிடும் நோக்கிலேயே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு மக்களிடம் கோரியுள்ளார்,'' என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே யுக்ரேன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு படைகள் தங்களது நிலைக்கே மீண்டும் திரும்பி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

இது யுக்ரேன் - ரஷ்யா இடையிலான மோதல் நிலையை குறைக்கும் என்ற நம்பிக்கையை தந்தாலும் ரஷ்யா எந்த எண்ணிக்கையில் படைகளைத் திரும்ப அழைத்து உள்ளது என்று இன்னும் தெளிவாகவில்லை.

விளம்பரம்

ரஷ்யா தனது படைகள் அனைத்தையும் யுக்ரேன் எல்லையில் இருந்து விலக்க வேண்டும் என்று யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவுடன் போரைத் தடுப்பதற்கான 5 சாத்தியமான வழிகள் என்னென்ன?
யுக்ரேன் மீதான ரஷ்ய-அமெரிக்க அழுத்தம்: இந்தியா யார் பக்கம்?
''எங்களுக்கு ஒரு விதி உள்ளது; எதைக் கேட்கிறீர்களோ அதை நம்பக்கூடாது; எதைப் பார்க்கிறார்களோ அதைத்தான் நம்ப வேண்டும்,'' என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ''படைகள் பின் வாங்கியது என்றால் மோதல் நிலை குறைகிறது என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

யுக்ரேன் - ரஷ்யா நிலைமை குறித்த 10 சமீபத்திய தகவல்கள் இங்கே.

யுக்ரேன் எல்லை மற்றும் பெலாரூசில் உள்ள ரஷ்ய படைகள் எண்ணிக்கை.
படக்குறிப்பு,
யுக்ரேன் எல்லை மற்றும் பெலாரூசில் உள்ள ரஷ்ய படைகள் எண்ணிக்கை.

புதனன்று யுக்ரேனில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் நாட்டின் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்றும், காலை 10 மணிக்கு முழு தேசமும் தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் ஓர் ஆணையை வெளியிட்டது. மேலும் இது வீரர்கள் மற்றும் எல்லைக் காவலர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தது.
இதற்கிடையில், ஒரு குறிப்பிட்ட நாளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கட்டளையிட்ட தாக்குதலை தாங்கள் கணிக்கவில்லை, ஆனால் அது எந்த நேரத்திலும் வரலாம் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
"நான் ஒரு குறிப்பிட்ட தேதிக்கு வரமாட்டேன், அது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அவர் நகர்வது முற்றிலும் சாத்தியம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, யுக்ரேனிய எல்லையில் ரஷ்யா தனது இராணுவ திறன்களை இன்னும் சேர்த்து வருவதாக கிர்பி கூறினார்.
இருப்பினும், யுக்ரேன் நெருக்கடிக்கு வெளியுறவு மட்டத்திலான தீர்வுக்கான அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்படவில்லை என, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவ்விவகாரத்தில் வலுவற்ற சூழலே நிலவுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையேயான 40 நிமிட தொலைபேசி உரையாடலில், ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு இடையிலும் அதுகுறித்த ராஜரீக உடன்படிக்கைக்கு இன்னும் சாத்தியம் இருப்பதாக இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ள ரஷ்யா, யுக்ரேனில் படையெடுப்பதற்கான திட்டம் இல்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களின் உரையாடலில், ராஜதந்திரத்திற்கான வழி இன்னும் இருப்பதாகவும், யுக்ரேனை நோக்கிய அச்சுறுத்தல்களில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதற்கு அது உதவும் என்றும் கூறியதாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
பிரிட்டன் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறினார், அதற்கு, "நீங்கள் இல்லாமல் நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம்." என்று ஜோ பைடன் பதிலளித்தார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திங்களன்று தேசத்திற்கு ஓர் எதிர்மறையான உரையில்தான், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிப்ரவரி 16 ஆம் தேதியை "ஒற்றுமை நாள்" என்று கூறி, தமது நாட்டு ராணுவத்தின் வலிமையையும் பாராட்டினார்.
"நம்மிடம் ஒரு பெரிய ராணுவம் உள்ளது. இது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு வலிமையான ராணுவம்," என்று பேசியவர், ஆனால் அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்க விரும்புவதாக கூறினார்.
"இப்போது நம்மைச் சுற்றி இருள் சூழ்ந்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாளை சூரியன் நமது அமைதியான வானத்தில் மீண்டும் உதயமாகும்." எனும் நம்பிக்கையான குறிப்போடு தனது உரையை முடித்தார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

ad

ad