புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2022

அவசர நிலையை பிரகடனம் செய்தார் கனேடியப் பிரதமர்!

www.pungudutivuswiss.com


 கனடாவில்  தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில்  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் 

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் சாரதிகளும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசாங்கம் அறிவித்தது.

அதேபோல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் சாரதிகள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என கனடா அரசாங்கம் தெரிவித்ததுடன் , கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.

இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் சாரதிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், போராட்டம் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.

இதன் காரணமாக லொறிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைப்பட்டது. அதன்பின்னர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அம்பாசிடர் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறிகளை அப்புறப்படுத்தனர்.

இதனால், கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது. இந்நிலையில், சாரதிகளின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டு கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

தற்போது, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதேவேளை சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறக்கபப்டவில்லை.

எனினும் அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad