புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2022

இன்றுவரை சுட்டு வீழ்த்த முடியாத உக்கிரைனின் Bayraktar TB2s ஆளில்லா விமானம்: உக்கிரைன் வெற்றிக்கு இதுவே காரணம் !

www.pungudutivuswiss.com

உக்கிரைன் மீது போர் தொடுத்துள்ள உலக வல்லரசான ரஷ்யா, ஏன் உக்கிரைன் நாட்டில் இந்த அளவு பின்னடைவை சந்தித்து வருகிறது என்று பலர் வியப்பில் உள்ளார்கள். மேலும் சொல்லப் போனால் சிலர் இது கட்டுக் கதை என நினைக்கிறார்கள். மேலும் சிலர் இது மேற்கு உலகத்தின் கதை என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. பல வருடங்களாக உலகில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் பொறி முறையில் முன்னோடியாக இருந்துள்ளது உக்கிரைன். துருக்கி மற்றும் உக்கிரைன் நாடுகள் இணைந்து தயாரித்த அதி நவீன ஆளில்லா விமானம் தான் Bayraktar TB2s , . இதனை இன்றுவரை உக்கிரைன் பாவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்களை நூற்றுக் கணக்கில் வைத்திருக்கிறது உக்கிரைன். இதனூடாக…

ரஷ்ய துருப்புகள் மற்றும் டாங்கிகள் நடமாட்டத்தை துல்லியமாக அவதானிக்கும் உக்கிரைன் ராணுவம், ஒரு கட்டளை தளத்தில் இருந்த வாறே பல முனைகளில் வரும் ரஷ்ய ராணுவத்தை எப்படி தாக்க வேண்டும் என்று, தரையில் உள்ள தமது படைகளுக்கு கட்டளை பிறப்பித்து வருகிறது. இதனூடாக ஏக காலத்தில் வீடியோவில் பார்த்துக் கொண்டு தாக்குதலை நடத்தும் திறனை, உக்கிரைன் கொண்டுள்ளது. இந்த ஆளில்லா விமானம் அமெரிக்க ஆளில்லா விமானங்களை விட மிகச் சிறியது. நீண்ட நேரம் வானில் சஞ்சரிக்க கூடியது. சத்தம் எழுப்புவது இல்லை. இவை தாக்குதல் நடத்தும் விமானமும் இல்லை. ஆக மொத்ததில் வேவு பார்க்கும் விமானம் தான்.

இவையே ரஷ்யாவின் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ஓரை ஏனும் ராணுவ புலனாய்வு இணையம் பல தகவல்களை இது தொடர்பாக வெளியிட்டுள்ளது. அந்த இணையத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்:  https://www.oryxspioenkop.com/

ad

ad