புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2022

இணைய சேவைகள் நீக்கம் – உலக இணையத் தொடர்பிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே துண்டித்துக் கொள்கிறதா?

www.pungudutivuswiss.com
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மிகவும் தீவிரமாகும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. அதே போல, ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு பல விதங்களில் ஆதரவாகவும் பல நாடுகளும், உலகின் பெருநிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டின. பொருளாதார, நிதி ரீதியான உதவி முதல் ரஷ்யாவுக்கு பலமான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா நாட்டில் தங்களின் சேவைகளையும் வணிகத்தையும் பல நிறுவனங்கள் துண்டித்துள்ளன. அதே போல, கடந்த இரண்டு வாரமாக ரஷ்யாவின் இன்டர்நெட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

உலகின் அனைவரையும் இணைக்கும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கூட கட்டுப்பாடுடன் இயங்கி வருகின்றன. மேலும், நெட்ஃபிலிக்ஸ் தற்போது ரஷ்யாவில் இயங்கவில்லை மற்றும் டிக்டாக்கில் புதிய வீடியோக்களை அப்லோடு செய்ய தடை உள்ளது. உலகத்துடன் இணையத்தொடர்பில் இருந்து ரஷ்யா தன்னைத்தனே துண்டித்துக் கொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்ச் 11 முதல் குளோபல் இன்டர்நெட் இணைப்பில் இருந்து ரஷ்யா துண்டித்துக் கொள்கிறது என்பதை ரஷ்ய டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் அமைச்சகம் ஆவணங்களை வெளியிட்டது. பல நாடுகளும் தங்களின் சேவைகளை நிறுத்தி வருவதால், ரஷ்யாவும் தடாலடியான முடிவை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி, வெஸ்டர்ன் இன்டர்நெட் சேவையை சார்ந்திருப்பதை நீக்க இருப்பதால், உலகின் இணையத் தொடர்பிலிருந்து ரஷ்யா தனித்து விடப்படும்.


இவ்வாறு செய்வதால், ரஷ்யாவின் பொருளாதாரம் சரிந்து விடும் மற்றும் வெளிப்படையான இணையம் இல்லாத சூழலில் ரஷ்யாவின் சர்வாதிகாரம் செய்யும் விளாடிமிர் புடினின் செயல்பாடுகள் எதுவும் உலக நாடுகளுக்குத் தெரியாமல் போய் விடும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில். ஆன்லைனில் பகிரப்பட்ட ஆவணங்கள், இணைய சேவைகளைப் பாதுகாப்பாக மாற்றுவதற்காக, சில நாட்களுக்குள் அரசுக்குச் சொந்தமான இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ரஷ்ய நாட்டு அதிகாரிகள் கூறியதாக உள்ளது.


கடந்த வாரம், உக்ரைன் நாடு ரஷ்யாவின் இணையத்தளங்களை உலக ரெஜிஸ்ட்ரியில் இருந்து நீக்குமாறு ICANN இடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அது ரஷ்ய நாட்டு அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவுக்குமாறு இருக்கும் என்று மறுக்கப்பட்டது.

இருந்தாலும், புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, மார்ச் 11 ஆம் தேதிக்குள் ரஷ்ய நாட்டு டொமைன் நேம் சிஸ்டம் (டிஎன்எஸ்) சேவையகங்களைப் பயன்படுத்தத் தொடங்குமாறு இணையதளங்களுக்கு அறிவுறுத்துகிறது. DNS என்பது ஒரு வலைத்தளத்தின் முகவரியை தொடர்புடைய ஐபி முகவரிக்கு மொழிபெயர்க்கும் தொலைபேசி புத்தகம் போன்றது.


தன் மீது தவறில்லை என்று ரஷ்ய அமைச்சகம் மீடியாவுக்குத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக , “வெளிநாட்டில் இருந்து எங்களுடைய இணையத்தளங்களில் தொடர்ச்சியான சைபர் தாக்குதல் நடந்து வருகின்றன. நாங்கள் வேறு விதமான சூழலுக்கு எங்களைத் தயார் படுத்தி வருகிறோம். நாட்டுக்குள் இருந்து இணைய இணைப்பை துண்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று தங்களின் கருத்தை வெளியிட்டது.

ad

ad