புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2022

தோல்வியில் முடிந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை

www.pungudutivuswiss.com

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றன

இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், துருக்கியில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ad

ad