புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2022

எத்தியோப்பியாவில் ஈவு இரக்கமின்றி 230 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்!

www.pungudutivuswiss.com

உள்நாட்டு போர் நடக்கும் எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்காக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உள்நாட்டு போர் நடக்கும் எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்காக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்

எத்தியோப்பியாவின் 110 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில், இரண்டாவது பெரிய இனக்குழுவாக அம்ஹாரா உள்ளது. ஒரொமியா மாகாணங்களில் வசிக்கும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் அடிக்கடி குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுமார் 230 பேர் பலியானதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களில் பலர் அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு பின்னர் அப்பகுதிக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த நபர் ஒருவர் கூறும்போது,

'நான் 230 உடல்களை எண்ணிவிட்டேன். எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்த பொதுமக்களுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல் இது என்று நான் பயப்படுகிறேன். நாங்கள் அவர்களை வெகுசன புதைகுழிகளில் புதைக்கிறோம். இன்னும் உடல்களைச் சேகரித்து வருகிறோம். கூட்டாட்சி இராணுவப் பிரிவுகள் இப்போது வந்துள்ளன, ஆனால் அவர்கள் வெளியேறினால் தாக்குதல்கள் தொடரக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்' என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றோரு நபர் கூறும்போது, இன்னொரு படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு முன்பு, அம்ஹாரா சமூகம் வேறு எங்காவது இடமாற்றம் செய்ய முயல்வதாகவும், தங்கள் இனமக்கள் கோழிகளைப் போல கொல்லப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

ad

ad