புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2022

அமெரிக்காவின் நடவடிக்கையால் கடும் கோபத்திற்கு ஆளான சீனா

www.pungudutivuswiss.com

அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர்.

அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர்

சீனா தைவான் ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க சட்டமியற்றுவர்களின் தைபே பயணம் சீனாவை கடுமையான கோபத்திற்குள் தள்ளியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சீனாவின் இராணுவ பிரிவு திங்களன்று தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் பல சேவை கூட்டு போர் தயார்நிலை ரோந்து மற்றும் போர் பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதுத் தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் பயணம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அமெரிக்காவின் உண்மையான முகத்தை முழுமையாக அம்பலப்படுத்துவதாகவும் தெரிவித்தது.

ஆனால் அறிக்கையில் பயிற்சியின் விவரங்கள் வழங்கவில்லை.

தைவான் பிரதமர் சு செங்-சாங், வெளிநாட்டு நண்பர்களின் இத்தகைய வருகையை சீனாவின் அச்சுறுத்தல்களால் தடுக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

ad

ad